மூலிகையின் பெயர் –: வெள்ளறுகு.
தாவரவியல் பெயர் -: ENICOSTEMMA LITTORALE.
;தாவரக்குடும்பம் -: .GENTIANACEAE.
வளரியல்பு -: வெள்ளறுகு கரிசல் நிலத்தில் வளரும் இயல்புடையது. வெளிறிய இலைகளை மாற்றடுக்கில் கொண்ட வெண்மையான பூக்களைக் கொண்ட சிறுசெடி.இது சுமார் 5 – 30 செ.மீ.உயரம் வளரக்கூட்டயது.இதன் இலைகள் 15 செ.மீ.நீளத்திலும், 5செ.மீ.அகலத்திலும் இருக்கும்.இதன் இலைகள் சாம்பல் நிறமாக தும்பை இலை போல் வளைந்து சுருண்டு இருக்கும் .பூக்கள் பால் வெள்ளை நிறமாக இருக்கும்.கணுக்களில் பூக்கள் கதிர் போல் பூக்ககும்.இதன் தண்டுகள் சாம்பல் பூசினால் போல் இருக்கும்..இந்தச் செடி கசப்புச் சுவையுடையது. இது தென் அமரிக்கா,ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளில் பரவிற்று. இது தமிழக
மெங்கும் வளர்கிறது. இது விதை மூலம் இன விருத்தி செய்யப்படுகிறது.
மருத்துவப் பயன்கள் –: வெள்ளறுகானது மலத்தை இளக்கி, வெப்பத்தை அகற்றி,பசியைத் தூண்டி, உடலை உரமாக்கும் செயலாக உடையது .இது காச்சல்,வாதம்,தோல்வியாதி, வயிற்று உப்புசம், பாம்புக்கடி,அஜீரணம், நீரிழுவு மற்றம் தொழுநோய் ஆகிய நோய்களைக் குணப்படுத்த வல்லது. இதில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம்,மெகனீசியம், சிலிக்கா, பாஸ்பேட். குளோரைடு, சல்பேட் மற்றும் கார்பனேட் உள்ளது..
வெள்ளறுகு செடியை வேறுடன் எடுத்து சுத்தமாகக்கழுவி இடித்து சாறு பிழிந்து இருபது மி.லி..முதல் முப்பது மி,லி. வரை பாம்பு கடித்திருப்பவர்களுக்கு உள்ளே கொடுத்து கடிவாயில் செடியின் சக்கையை அரைத்து வைத்துக் கட்டியும் வர,இரண்டொருதரம் வாந்தி அல்லது பேதியாகும்.மீண்டும் ஒரு முறை கொடுக்க நச்சு இறங்கும்.புளி, உப்பு நீக்க வேண்டும்.
வெள்ளறுகு செடியை தேவையான அளவு எடுத்து வெந்நீர் விட்டு அரைத்து காலையில் சொறி, தினவு தவளைச சொறி சிரங்கு, மேகத்தடிப்பு, ஊறல்முதலியவை உள்ளவர்கள் பூசி, ஒரு மணி நேரம் சென்ற பின்னர் பேய் பீர்க்கங்காய் கூட்டால் உடலைத் தேய்த்துக் குளித்து வந்தால் அவை குணமாகும்.
வெள்ளறுகு செடியை எடுத்து சுத்தம் செய்து நன்றாக இடித்து அதனுடன் பத்து மிளகு, ஒரு துண்டு சுக்கு,நான்கு சிட்டிகை சீரகம் ஆகியவைகளைத் தட்டி மண் சட்டியில் போட்டு, எண்ணூறு மி.லி. நீர்விட்டு அதனை இருநூறு மி.லி.யாக வற்றும் வரை நன்கு காச்சி வடிகட்டி காலை, மாலை இரண்டு வேளை நூறு மி.லி வீதம் அருந்தி வர கீல்வாதம், நரம்புக் கோளாறுகள் முதலியவை கட்டுப்படும். வெள்ளறுகு பூண்டை அரைத்து சிறு சிரங்குகளுக்கும் பூசி வரலாம்.
பெண்களுக்கு மிகுந்த தொல்லை தருகின்ற நாட்பட்ட வெள்ளைப்படுதல்
நோய்க்கு வெள்ளறுகு செடியுடன் சிறிது மிளகு, ஒரு பல் பூண்டு சேர்த்து
அரைத்து பாலில் கொடுக்கலாம். தேவையான வெள்ளறுகை வெண்மிளகுடன் சேர்த்து அரைத்து குடநீரிட்டு வடிகட்டி கொஞ்சம் பசுவின் வெண்ணெய் கூட்டி உடல் சூடாக இருக்கும் போது அருந்து வர சூட்டைத் தணிக்கும். வெள்ளறுகு முழுச்செடியையும் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வர நீரழிவு நோய் கட்டுப்படும்.
No comments:
Post a Comment